சென்னை: நடப்பு கொள்முதல் சீசனில் 19% வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இம்மாத துவக்கத்தில் நல்ல மழை பெய்தது. இதனால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே, விவசாயிகளின் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தமிழக அரச மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதைதொடர்ந்து, இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் கான் தலைமையிலான குழு, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்தது. அவற்றை ஆய்வகத்தில்பரிசோதித்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அடிப்படையில், 19 சதவிகிதம் வரை, ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி அறிவித்து உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பருவமழை தொடங்குவதற்குள் நெல்லை கொள்ளை முதல் செய்ய வேண்டும் என தமிழகஅரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தற்போது 90 சதவிகிதம் வரை உயர்த்தி நெல்கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கி உள்ளது.