டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இந்திய ராணுவத்தின் தற்போதைய தலைமை தளபதியாக  மனோஜ் பாண்டே இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூன் 30இல் முடிவதால் புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டு உள்ளார். அதன்படி, புதிய தலைமை தளபதியாக,  ஜூன் 30ஆம் தேதி உபேந்திர யாதவ்  பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீடித்த அவரது நீண்ட மற்றும் புகழ்பெற்ற சேவையில், பல்வேறு கட்டளை, பணியாளர்கள், பயிற்றுவிப்பு மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் பரந்த செயல்பாட்டு அனுபவத்தைக் கொண்டவர்,

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியின் கட்டளை நியமனங்களில் ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவை அடங்கும்” தற்போது திவேதி தற்போது இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]