உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

மாணவர்கள் தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் சென்டர்களே கதியென்று விழுந்து கிடக்கின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்துள்ள மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீவிரம் காட்டியது.

நவம்பரில் நடைபெற்ற 11 பேர் கொண்ட குழு கூட்டத்தில் மாணவர்கள் பயிற்சி மையங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலம் தினசரி பயிற்சி நேரத்தை இரண்டு முதல் மூன்று மணிநேரமாகக் குறைக்கவும் வழக்கமான பாடத்துடன் போட்டித் தேர்வு பாடங்களையும் இணைத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து மதிப்பீடு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு மேற்கொண்ட ஆய்வில் JEE/NEET போன்ற போட்டித் தேர்வுகளில் பல விடைகள் கொண்ட MCQ வடிவ வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன, CBSE பெரும்பாலும் பாடம் மற்றும் கோட்பாடு சார்ந்ததாக உள்ளது தெரியவந்தது.

இந்த பொருத்தமின்மை காரணமாக பயிற்சி நிலையங்களின் ராஜ்ஜியம் நடந்து வருவதை கண்டுபிடித்தனர்.

இந்த இடைவெளியைக் குறைக்க, தினசரி பயிற்சி நேரங்களை 2-3 மணிநேரமாகக் கட்டுப்படுத்துதல், பள்ளி பாடத்திட்டங்களை போட்டித் தேர்வுகளுடன் சீரமைத்தல், 11 ஆம் வகுப்பில் போட்டித் தேர்வுகளை அறிமுகப்படுத்துதல், சேர்க்கைகளில் வாரியத் தேர்வு முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல் ஆகியவற்றை இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

+1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை… கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்

[youtube-feed feed=1]