சென்னை:

த்திய நிதிநிலை அறிக்கை இன்று நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என்று பாராட்டி உள்ளார்.

மேலும், பட்ஜெட்டில், முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்” என்றும், புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பேசியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

அத்துடன்,  பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு முன்னர் மாநில அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.