ண்டிகர்

ஜி எஸ் டி யில் பஞ்சாப் மாநிலத்துக்கு வரவேண்டிய ரூ.3500 கோடியை மத்திய அரசு இன்னும் தரவில்லை என காங்கிரஸ் தலைவர் சுனில்ஜகார் கூறி உள்ளார்.

ஜி எஸ் ட் இருபிரிவாக பிரிக்கப்பட்டு வசுலிக்கப்படுகிறது.  மாநில வரியாக 50% மற்றும் மத்திய அரசு வரியாக 50% வசூலிக்கப்படுகிறது.   நிறுவனங்களால் மத்திய அரசுக்கு செலுத்தப் படும் ஜி எஸ் டியில் பாதிப் பங்கை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும்.  இது குறித்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதி காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சுனில்ஜகார் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர், “பஞ்சாப் மாநிலத்துக்கு ஜி எஸ் டியின் பங்குத் தொகையாக ரூ.3600 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் அதை மத்திய அரசு அளிக்காமல் உள்ளது.  அதனால் மாநிலத்தில் பல நலத் திட்டங்கள் நின்று விட்டன.  பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பங்கை தாமதமாக மத்திய அரசு வழங்குகிறது.   இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளிடம் மக்களிடம் அவப்பெயரை உண்டாக்க மோடி செய்து வரும் சதித்திட்டமே.  மொத்தத்தில் மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கி விட்டது” எனக் கூறி உள்ளார்.