பாட்னா
பாஜக – சிராக் பாஸ்வான் கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது., அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2020 ஆம் வருடம் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்தார்
எனவே அவரது சகோதரர் பசுபதி பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பசுபதி பராஸ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வானுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது.
ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியைப் பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஜ் பாஸ்வானும் தொடங்கினர். வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்ததை எதிர்த்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி பராஸ் விலகியுள்ளார்.