சென்னை
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காலை வேளையில், நடைபாதையில் சிமெண்ட் போடும் பணி நடப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எப்போதுமே பிசியான ரெயில் நிலையங்களில் ஒன்று. அதிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் நெரிசல் நிலவும்.
அப்படி இருக்கும் போது, இன்று காலையில் மூன்றாம் நடைமேடையில் சிமிண்ட் போடும் பணியை ரெயில்வே நிர்வாகம் செய்து வருகின்றது. ஒரு அடி அகலமே தண்டவாளத்தை ஒட்டியுள்ள இடத்தில் விட்டு விட்டு பாக்கி உள்ள இடங்களில் பணி நடைபெறுகிறது. இதனால் பயணிகள் ரெயிலில் ஏறி இறங்க மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுபற்றி ரெயில்வே பணியாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஒன்றும் கூறவில்லை. இரவு நேரம், அல்லது காலை 10 மணிக்கு மேல் இதே பணியைச் செய்யலாம் என பல பயணிகள் அறிவுறுத்தினர். ஆனால் ரெயில்வே பணியாளர்கள் அதற்கும் பதில் அளிக்கவில்லை.