கோழிக்கோடு

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் ஒரு இளைஞர் தனது கால்சட்டை  பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது.

உலகெங்கும் தற்போது செல்போன் வைத்திராத நபரைக் காண்பது அரிதாக உள்ளது.   ஆரம்பக் காலத்தில் அரிதாகக் காணப்பட்ட செல்போன்கள் தற்போது அனைத்து மக்களிடமும் உள்ளது.  இந்த செல்போனால் பலவித ஆபத்துக்கள் உள்ளதாகக் கருத்துக்கள் கூறப்படும் போதும் அதனை உபயோகிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹாரிஸ் ரகுமான் என்பவர் தனது அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றுள்ளார்.   அவர் வழக்கம் போலத் தனது செல்போனை தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்துப் பணி புரிந்து கொண்டிருந்துள்ளார்.

அந்த செல்போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துள்ளது/  இதனால் ரகுமானுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.  அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்  அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்த தகவல்  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.