சென்னை

சென்னை புழல் சிறைச்சாலையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழலில் உள்ள சிறைச்சாலையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சட்ட விரோதமாக கைதிகளிடையே உள்ளதாக புகார் வந்தது.   அதையொட்டி இன்று மாதவரம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் சுமார் 60 க்கு மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.    மேலும் ஒரு கைதியிடம் ரு.500 ரொக்கப் பணம் சிக்கி உள்ளது.   சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெறுவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.