டெல்லி திஹார் சிறையில் உள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவினரால் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின் டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.

அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில், சிறை கண்காணிப்பாளர் உட்பட 4 சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான சத்யேந்திர ஜெயினின் வழக்கறிஞர் “சிறை விதிகளுக்கு உட்பட்டே சத்யேந்திர ஜெயினுக்கு இந்த மசாஜ் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதி மீறல் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் எதற்காக மசாஜ் செய்யப்பட்டது என்றும் இந்த வீடியோ எங்கிருந்து கசியவிடப்பட்டது என்பதும் தெரியவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, ஆம் ஆத்மி இவ்விரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.