ண்டிகர்

ஏ எஸ் அதிகாரியின் மகளை பாஜக தலைவர் மகன் கடத்த முயற்சி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவத்துக்கு முன் மது வாங்கிய சிசிடிவி ஃபுட்டேஜ் வெளியாகி உள்ளது.

ஹரியானா மாநில  பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து தனக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் வர்ணிகா காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக சொல்லப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் பிறகு ஜாமீனில் விடப்பட்டனர்.  பிறகு  காவல் நிலையத்துக்கு வந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டனர்.   ஆனால் இருவரும் தங்களின் இரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனைக்கு அளிக்க மறுத்து விட்டனர்.   அது மட்டுமின்றி இருவரும் சட்டக்கல்வி பயின்றுள்ளதால் தங்களை வற்புறுத்தி சோதனைக்கு உட்படுத்துவது தவறு என வாதிட்டதால் சோதனை நடத்தப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று விகாஸ் மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவரும் ஒரு மதுக்கடையில் மது வாங்கிய வீடியோ அந்தக் கடையின் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.   எனவே சம்பவம் நடந்த போது அவர்கள் போதையில் இருந்ததை நிரூபிக்கும் சாட்சியாக இதை போலீஸ் பயன்படுத்தக்கூடும் என தெரிய வருகிறது.