சென்னை: நீலகிரி, ஈரோடு மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி காமிராக்கள் திடீர் திடீரென செயலிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த 19ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகள், முக்கிய கல்லூரிகளில் உள்ள ஸ்டிராக் அறைகளில் வைக்கப்பட்டு, அறை சீலிடப்பட்டுள்ளது. அறை முழுவதும் சிசிடிவி காமி பொருத்தப்பட்டு உள்ளதுடன், 3 அடுக்கு பாதுபாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நீலகிரி, ஈரோடு பகுதிகளில் உள்ள ஸ்டிராக் அறைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதானது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராக் அறைகளில் , சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் இன்று அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் , வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன. போதுமான கேமராக்கள் இருக்கிறதா, முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். சென்னையில் 3 தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்பு டோப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 140 போலீசார் வீதம், 3 ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்