சென்னை:
ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட காலத்தில் சிசிடிவிகளை அமைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கிளப்களில் சூதாட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவிகளைப் பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றறிக்கை வாயிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel