மதுரை:
அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வரக்கோரிய வழக்கு, தமிழக அரசின் பதில் மனுவை தொடர்ந்து முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டுவரக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்றிஞர், தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைத்துள்ளதாக பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அரசின் பதில் மனுவை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.