download (2)
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதுமதியம் 2 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கே.கே.செளத்ரி அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1 முதல் 28 வரை நடைபெற்றன. இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 99 ஆயிரத்து 122 மாணவர்கள் தேர்வு எழுதினர்.     தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 509 மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வினை எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
டெல்லியிலிருந்து வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவுகளை results.nic.in, cbse.nic.in, cbseresults.nic.in என்ற இணையதள முகவரிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும் கே.கே. சவுத்ரி கூறியுள்ளார்.