திருவனந்தபுரம்:
டில்லியில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதை தொடர்ந்து, மறுதேர்வு தேதியை சிபிஎஸ்இ கல்வி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நடைபெற்று வரும் நிலையில், கேரள மாணவர் ரோகன் மேத்திவ் என்பவர் சிபிஎஸ்இயின் மறு தேர்வு உத்தரவ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதாரம், 10-ம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே வாட்ஸ்அப் மூலம் டில்லியில் கசிந்ததால், அந்த பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் கொச்சியை சேர்ந்த மாணவர் ரோகன் மேத்திவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல, முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்”. இந்த விவக்காரம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.
இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.