புதுடெல்லி:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்படும் என்றும், இரண்டு பருவங்களின் இறுதியிலும் பருவத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத் தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும். ஒவ்வொரு பருவத்திற்கும் மொத்த பாடத்திட்டத்தில் 50% பாடத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11 வகுப்பு தேர்வு எழுதிய ஐந்து தாள்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மூன்றை பரிசீலிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.