டில்லி:
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவை சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 91.01 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் வெளியிடப் பட்டது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 91.01 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.
தேர்வு முடிவுகள்
www.cbse.nic.in,
www.cbseresults.nic.in,
examresults.net, digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.
Patrikai.com official YouTube Channel