டெல்லி
சி பி எஸ் இ நாடெங்கும் 21 பள்ளிகளின் அங்கீகாரததை ரத்து செய்துள்ளது.
அவ்வப்போது நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு அந்தஸ்து மற்றும் தேர்வு விதிகளின் கீழ் இயங்குகின்றனவா என ஆய்வு நடத்தப்படுகிறது.
அண்மையில் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில பள்ளிகள் போலி மாணவர் சேர்க்கை, பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ. செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்ட அறிக்கையில்
”முழுமையான விசாரணைக்கு பிறகு விதிகளின்படி இயங்காத 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள்து. மேலும் 6 பள்ளிக்கூடங்களின் தரநிலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 21 பள்ளிகளில் 16 பள்ளிகள் டெல்லியைச் சேர்ந்தவை, 5 பள்ளிகள் ராஜஸ்தானைச் சேர்ந்தவை”
என அறிவிக்கப்பட்டுள்ளது