டில்லி

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரச் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.   கொரோனா பரவல் குறைந்த உடன் இந்த தேர்வுகள் நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது.  ஆனால் இதுவரை கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் இந்த வருடத்துக்கான சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பரவலால் ரத்து செய்வதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது.  இந்த முடிவு இன்று பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த நேரம் நடக்கும் ஆன்லைன் மூலம் விடைகளை தேர்வு செய்யும் முறையில் தேர்வுகள் நடத்தி அதன்  அடிப்படையில் மாணவரக்ளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.  மாணவர்கள் வழக்கமான முறையில் தேர்வு எழுத விரும்பினால் அவர்களுக்கு அப்போதைய கொரோனா நிலமையை பொறுத்து அனுமதி வழங்கப்பட உள்ளது.