சென்னை: நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில்படித்து வரும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டிறுதி பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 12ந்தேதி முடிவடைகிறது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும் என்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளன.

10ம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு இன்றைய தினம் தொடங்குகிறது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று நடக்க உள்ளது.

நாடு முழுவதுழம  10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மட்டும் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.. இதில், 12,47, 364 மாணவர்களும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வி நாடு முழுவதும் 7,240 மையங்களில்   நடைபெறுகிறது. மொத்தம் 24,491 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 76 பாடங்களுக்கு 16 நாட்களுக்கு நடைபெறும் தேர்வு மார்ச் 21ந் தேதி முடிவடைய உள்ளது.

12ம் வகுப்பு பொறுத்தவரையில், மொத்தம் 16,96,770 பேர் தேர்வெழுதிகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 6,759 மையங்களில் இந்த தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 115 பாடங்களுக்கு 36 நாட்கள் தேர்வு நடைபெறுகிறது.. இத்தேர்வுகள் ஏப்ரல் 5 ந் தேதி முடிவடைய உள்ளன.

மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், அனைத்து பாடங்களுக்கிடையே போதிய நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டி ருப்பதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.. இரு தரப்பு மாணவர்களுக்கும் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை தேர்வு நடைபெறவுள்ளது..