டெல்லி: மத்திய கல்வி வாரியத்தின சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், ஒன்றுமுதல் பிளஸ்2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டு, மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர்படிப்புக்கு பிளஸ்2 மாணவர் மதிப்பெண் முக்கியம் என்பதால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. பின்னர், அதுகுறித்து மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்த நிலையில், ஜூலை 31ந்தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம்உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுக முடிகள் இன்று வெளியாகும் என தகவல்கள் பதவி வருகின்றன. அவர்களுக்கு, , 10,11-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30%, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.
மதிப்பெண் பட்டியலுடன் தேர்வு முடிவு www.cbsc.nic.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் வெளியாகும் என கூறப்படுகிறது.
மாணாக்கர்கள் படித்து வந்த அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், மதிப்பெண்களின் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.