டில்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ப.சிதம்பரத்துக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்யுள்ளது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூலை 3ம் தேதி வரை கைது செய்ய நீதிபதி தடை விதித்தார். எனினும், சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
[youtube-feed feed=1]