பாட்னா,
பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லல்லு பிரசாத் யாதவ் வீடுகளில் சிபிஐ இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
லல்லு, ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கும் டெண்டரில் முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட புகாரின் காரணமாக அவரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
லல்லு பிரசாத் யாதவ் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 12 வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே லல்லு பீகார் முதல்வராக இருந்தபோது அவர்மீது மாட்டுத்தீவன ஊழல் மற்றும் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில, 2006ம் ஆண்டு ரெயில்வே துறை அமைச்சராக லாலுபிரசாத் இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சிக்கு சொந்தமான ரெயில்வே ஓட்டல்களை பராமரிக்க ராஞ்சி, பூரி நகரில் உள்ள தனியார் ஓட்டல்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக சி.பி.ஐ. சோதனை வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி, பாட்னா, ராஞ்சி, பூரி, குர்கான் உள்ளிட்ட 12 நகரங்களில் லாலுபிரசாத், அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.