டில்லி,
சிபிஐயின் முன்னாள் இயக்குநர் அமர்பிரதாப் சிங் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது நியமினம் செய்யப்பட்ட அமர்பிரதாப் சிங் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை சரிவர விசாரிக்கவில்லை என்று பா.ஜ.க அரசு குறை கூறியது. அதைத்தொடர்ந்து பாரதியஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் சில பணிகளை முடித்து தருவதாக கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர்மீது அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்தே அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் மொயின் குரேசியின் வீடு, அலுவலகங்களிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சென்னை, டெல்லி, காசியாபாத், ஐதராபாத் ஆகிய இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.