சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் புதன்கிழமை சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள பாகேலின் வீட்டையும், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் முதல்வரின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளையும் சிபிஐ குழுக்கள் சோதனை செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனை குறித்து சிபிஐ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

முன்னதாக, திங்களன்று தனது வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் விரக்தியின் விளைவாகும் என்று பாகேல் கூறியிருந்தார்.

பாகேல் தனது மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் வீட்டில் இருந்து ₹32-33 லட்சம் ரொக்கத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ததாக கூறியிருந்தார்.

சமீபத்தில், மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக பாகேலின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.