டில்லி:

பஞ்சாப் நேஷ்னல் வங்கி (பிஎன்பி) முறைகேட்டில் ஆர்பிஐ அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.13,000 கோடி வரை முறைகேடு செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தலைமை பொது மேலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டைத் தடுக்க தவறியது ஏன்? என்று சிபிஐ கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.