டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வங்கி லாக்கரில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மணிஷ் சிசோடியா தனது மனைவியுடன் வங்கிக் கிளையில் ஆஜரானார்.

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து சிபிஐ நீதிமன்ற அனுமதியுடன், மனிஷ் சிசோடியா  வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ம் தேதி  சிபிஐ அதிகாரிகள் கடந்த சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்ட உள்ளதாக சிபிஐ கூறியது.

ஆனால், சிசோடியா அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளதுடன், பாஜக கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது. ஆம் ஆத்மி அரசுகளின் செயல்பாடுகளால் குறிப்பாக கல்வித் துறையின் செயல்பாடுகளால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது, முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதான கடுப்பில் தன்மீது பாய்கிறது  என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில்  சிபிஐ அதிகாரிகள் இன்று மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சோதனை செய்து வருகின்றனர்.  இன்று காலை காசியாபாத் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ சோதனை நடத்தும்போது மணிஷ் சிசோடியாவும் அவரது மனைவியும் அங்கு வந்தனர். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.