சென்னை

சிபிஐ 13 பிரிவுகளின் கீழ் முன்னால் ஐ ஜி பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழக கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக
பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தபோது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேண்டுமென்றே தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம்  உத்தரவிட்டது.இதையொட்டி நேற்று பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை தொடர்து சுமார் ஏழரை மணி நேரம் நடைப்பெற்றது. தற்போது முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின்கீழ் சிபி ஐவழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில்  இந்தகுற்றம் நடந்ததாக குறிப்பிட்டு சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.