புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடெங்கிலும் மொத்தம் 150 இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டது சிபிஐ அமைப்பு.

ஊழல் அதிகாரிகள் மற்றும் புகார்களுக்கு உள்ளான அரசு துறைகள் ஆகியோரை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாவும், பிரதமர் மோடியின் ‘பொது மக்களுக்கான வாழ்வை எளிதாக்குதல்’ என்ற செய்தியின் ஒரு பகுதிதான் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், குவஹாத்தி, ஸ்ரீநகர், ஷில்லாங், சண்டிகர், ஷிம்லா, சென்னை, மதுரை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, காந்திநகர், கோவா, போபால், ஜபல்பூர், நாக்பூர், பாட்னா, ராஞ்சி, காசியாபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகள் அடுத்த வாரமும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு துறைகள், அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளின் விஜிலென்ஸ் அதிகாரிகளின் உதவியுடன் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.