சண்டிகர்: அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீதுமீது சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு மே 7ந்தேதி விசாரிக்கப்படும் என அறிவித்து உள்ளது.
அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீது சோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) இட ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி) மற்றும் 120-பி (குற்றவியல் சதித்திட்டம்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (1) (ஈ) ஆகியவற்றின் கீழ் ஹூடா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஹூடா மற்றும் காங்கிரஸ் தலைவர் மோதி லால் வோரா ஆகியோர் குற்றப்பத்திரிகையை எதிர்த்தும், என வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனு தள்ளுபடியானது.
இதையடுத்து, ஹூடாமீது பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் மே 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.