சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்குக்கு ஆளுநர் ரவி அனுமதி கொடுக்காத நிலையில், அந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணையின்போது, 11வது முறையாக வாய்தா கேட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சஎ ஜெயலலிதா தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்ததடை விதித்தார். ஆனாலும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கு அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உடந்தை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து, 2017ம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் இந்த கடிதம் எழுதப்பட்டது.
அதற்கு திமுக கடந்த கடந்த 2022ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இது தொடர்பான கோப்புகள் ஆளுநரின் அனுமதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை, குட்கா வழக்குக்கு அனுமதி அளிக்காமல் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக, குட்கா வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, விசாரணை யின் அறிக்கை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராததால், 11வது முறையாக நீதிமன்றத்தில் வாய்தா கேட்டுள்ளது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்தாண்டு முதல் அனுமதி கோரி வருகிறது. ஆனால், இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை.
குட்கா வழக்கின் விசாரணை இதுவரை 11முறை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், ஆளுநரின் அனுமதி இல்லை என கூறியே சிபிஐ வாய்தா கேட்டு வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு 11வது முறையாக சிபிஐ நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டி, வழக்கு மேலும் ஒத்தி வைக்க கோரியுள்ளது. இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.