இந்திய ரூபாய்க்கு மாற்றாக சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC – சி பி டி.சி) எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது மத்திய ரிசர்வ் வங்கி.

நவம்பர் 1 முதல் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த சி பி டி.சி கரன்சிகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் மொத்தவிற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பணமோசடி மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிக்க கிரிப்டோ கரன்சி பயன்படும் அபாயம் உள்ளதாக ஆர்பிஐ கவலை தெரிவித்துள்ளது.

இதனை தடுக்கும் முயற்சியாக ஒருபோதும் கிழிக்கவோ, எரிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ முடியாத காலவரையற்ற பயன்பாட்டுக்கு உதவும் டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகிறது.

இதனை ரூபாய் நோட்டுகள் போல் அனைத்து பயன்பாட்டிற்கும் செலவிடலாம்.

இந்த சி.பி.டி.சி. தற்போது முதல்கட்டமாக மொத்தவிற்பனை செய்யும் வங்கிகளின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து சில்லறை அல்லது பொதுப்பயன்பாட்டிற்கான சி.பி.டி.சி. அறிமுகப்படுத்தப்படும்.

பணபரிவர்தனையை குறைத்து புதுமையான வழிகளில் செலவு செய்ய இந்த டிஜிட்டல் கரன்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.