டில்லி:
காவிரி நீர் பிரச்சினையில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் இடையில், காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, 2007ல், காவிரி நதிநீர் தீர்ப்பாயம் இடைக்கால தீர்ப்பு கூறியது. ஆனால், அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன்மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித வராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11–ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கின் 3 மாநிலங்கள் சார்பாக பல்வேறு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.