துரை

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட உள்ளது  இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ காவிரி பற்றிய வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தனர்.  இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.   இந்த தீர்ப்பின் மூலம் நீண்ட நெடிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இந்த காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது என தெரிவித்துளார்.