சென்னை :

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள நிலையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை.

இதற்கு தமிழக அரசு உள்பட அனைத்துக்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விவசாய சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில, மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கிண்டியில் உள்ள கவர்ன்ர் மாளிகையை முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.