டில்லி:
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கூட்டப்பட்ட கூட்டத்தின் முடிவில் பேசிய மத்திய நீர் வளத்துறை செயலர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் சொல்லவில்லை என்று குறி, தமிழகத்தின் முதுகில் குத்தி உள்ளார்.
காவிரி குறித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வந்து 3 வாரம் காலம் கடந்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக எம்.பி.க்கள் டில்லி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை செயலர் சார்பில் இன்று அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இன்றை கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் கலந்துகொண்ட தமிழக தலைமை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
அதைத்தொடர்ந்து பேசிய கர்நாடக அரசு தலைமை செயலாளர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்த பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உ.பி.சிங், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்றும், காவிரி நீரை வழங்குவதை கண்காணிக்க ஒரு ஸ்கீம் மட்டுமே அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னதாக புதிய விளக்கத்தையும் அவர் கூறி உள்ளார்.
இந்த தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் தொடர்ந்து காலூன்றி வரும் பாரதிய ஜனதா, தமிழகத்தில் தனது காலை பதிக்க முயற்சி செய்து, எச்.ராஜா போன்றவர்களைக்கொண்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அவர்களின் முயற்சி பலிக்காத நிலையில்,
கர்நாடக தேர்தலை மனதில்கொண்டு, அங்கு ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் தமிழகத்தின் முதுகில் குத்தி வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறிய நிலையில, இன்று நீர்வளத்துறை அமைச்சர் பேசியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.