டெல்லி: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வரும் நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட காவிரி ஆணையம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக, தமிழ்நாடு, கர்நாடகா, கேரள, புதுச்சேரி மாநிங்களுக்க இடையே   உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.. இந்த ஆணையம், காவிரி நீர் இருப்பை அறிந்து, தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களுக்கு உரிய பங்கீட்டின்படி மாதந்தோறும் தண்ணீரை திறந்துவிட அறிவுறுத்தி வருகிறது.

இந்த ஆணையம் இதுவரை 21 முறை கூடியுள்ள நிலையில், இன்று 22வது முறையாக கூடுகிறது.  நீர்வளத்துறை  தலைவரான, காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கடந்த சில மாதங்களாக முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார்.அ தைத்தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரியாக ஹல்தாரையும் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது,  தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார்.

இதையடுத்து, மத்தியஅரசு, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, காவிரியில் சொற்ப அளவில்  தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இது குறுவை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை.

இந்த நிலையில், இன்று கூடும் ஆணைய கூட்டத்தில்,  கர்நாடக அணைகளில் முழுமையான அளவு து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.