fire
சென்னை:

சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ்  பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பேரணயில் இளைஞர் விக்னேஷ் தீ குளித்த்ர்.  இந்நிலையில் இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது.
1vignesh
இந்த பேரணியின் போது இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றி  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் மரணமடைந்தார்.
உடலில் 95 சதவீத தீக்காயத்துடன் விக்னேஷ்க்கு உயிர்காக்கும் கருவி பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மன்னார்குடி சேர்ந்த விக்னேஷ் நாம் தமிழர் கட்சியின் பாசறை செயலாளராக இருந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ்.
இளைஞர் விக்னேஷ் மரணத்தை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

[youtube-feed feed=1]