சென்னை:
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு வரும் 7ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. இந்நிலையில் தமிழக அரசுடன் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel