டில்லி,
மிழகம், கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினை குறித்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது என்று உச்ச நீதி மன்றம் அதிரடியாக அறிவித்து உள்ளது.
காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் உச்ச நீதி மன்றத்திற்கு இல்லை என்று மத்திய அரசு ஆட்சேப மன தாக்கல் செய்தது. அதை நிராகரித்த உச்ச நீதி மன்றம், விசாரிக்கும்  அதிகாரம் எங்களுக்கே உள்ளது என்று அதிரடியாக கூறியுள்ளது.

மேலும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகம் 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காவிரி வழக்கு குறித்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி வெளியானது.
நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுகுறித்த விசாரணையில், மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை விசாரிக்க உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று ஆட்சேப மனு தாக்கல் செய்து வாதாடியது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த் உச்ச நீதிமன்றம், இது குறித்து கூடுதல் உத்தரவுகளை டிச 15ந் தேதி விசாரணைக்கு பிறகு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது.