டில்லி,
காவிரி பிரச்சினை விவகாரத்தில் , உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஆட்சேப மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
cauvery_eps
ஆனால், காவிரி விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்  என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, காவிரி குறித்த விசாரணை பிற்பகல் 2.30க்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
காவிரில் தமிழகத்திற்கு, காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்கால உத்தரவுபடி தண்ணீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட கோரியும், உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ததது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு, வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ எனவும், காவிரி கண்காணிப்பு குழு  அமைக்கப்பட வேண்டும் என்றும் கடந்த மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது. அதே நேரம், ‘செப்டம்பர் 27ம் தேதி வரை, வினாடிக்கு, 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என,  கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட், 20ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கர்நாடகா மதிக்கவில்லை. தண்ணீர் திறந்து விட முடியாது என பகிரங்க மாகவே முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்,  , ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, நான்கு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என்றும் மத்திய அரசுக்கு உத்தர விட்டது.
ஆனால், மத்தியஅரசு இந்த பிரச்சினையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மறுத்து விட்டது.
இதனால், காவிரி உயர்மட்ட குழுவை அமைத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்து 17ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், உண்மையை நிலையை மறைத்து,  கர்நாடகாவுக்கு சாதகமாகவே அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது.
supreme court
இன்று காவிரி பிரச்சினை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆட்சேப மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.
காவிரி விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் மனு ஏற்றதா என்று பிற்பகலில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
கர்நாடகாவின் இந்த மனு, காவிரி பிரச்சினையை மேலும் காலம் கடத்த முயற்சிப்பது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை ஒத்தி வைத்தது. இன்று மாலை இடைக்கால உத்தரவு நிச்சயம் பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.ஷா  ஆய்வறிக்கையில் இரு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், அறிக்கையில் ஆட்சேபம் இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவிரி பிரச்சினையில் பேசிக்கொண்டே இருந்தால் என்னதான் தீர்வு என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.