மாட்ரிட்:

ஸ்பெயினில் இருந்து கேட்டலோன் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தனி குடியரசு நாடாக செயல்படும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் தொழில் வளம் மிக்க மாகாணமாக கேட்டலோனியாவின் பார்சிலோனா விளங்குகிறது. இங்கு தனிநாடு கோரிக்கை சில ஆண்டுகளாக வலுத்து வருகிறது. கடந்த 2-ம் தேதியன்று தனி நாடு கோரி நடந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க முடியாது என ஸ்பெயின் அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கேட்டலோன் மாகாணத்தின் தலைவர் கார்லஸ் பியூக்டிமென்ட் தலைமையில் போரட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று ஸ்பெயின் நாடாளுமன்றம் கூடியது. இதில் கேட்டலோன் ஸ்பெயினில் இருந்து பிரிந்து குடியரசு நாடாகிறது என அறிவிக்கப்பட்டது.

இதற்கான தீர்மானத்தை பிரதமர் மரியானோ ரிஜோய் கொண்டு வந்தார். வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 70 பேர் வாக்களித்தனர். 10 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 2 பேர் அவைக் வரவில்லை. பிரதமர் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. பிரதமரின் அறிவிப்பு ஸ்பெயின் ஜனநாயகத்தில் கறுப்பு நாள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.