டில்லி,
சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.
தேர்தல் என்பது மதச்சார்பற்ற ஒன்று. இதில் சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்துத்வா தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடுபவர், சாதி, மதம் அல்லது மொழியின் பெயரால் வாக்கு கோர முடியாது என்று அதிரடியாக கூறி உள்ளது.