வினோத்குமார் தயாரிப்பில் சி.எஸ்.மஹிவர்மன் இயக்கத்தில் மு.ராமசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், வாய்தா.
புகழ் – பவுலின் ஜெசிகா ஜோடியாக நடித்துள்ளனர். நாசர் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார்.

நீதிமன்ற நடைமுறைகளை விமர்சிக்கும் இப்படத்தை அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டினர். அதே நேரம் வழக்கறிஞர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், படத்தில் தங்கள் சாதியை இழிவுபடுத்தி இருப்பதாக, ராஜகுல சமூக நலச்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘இப்படத்தை ஈரோடு மாவட்டத்தில் வெளியிடாமல் தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சாதி மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு’ என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
படம் நாளை (27.05.2022 – வெள்ளிக்கிழமை) வெளியாக இருக்கும் நிலையில் வழக்கறிஞர்கள் மற்றும் குறிப்பிட்ட சாதியினரின் எதிர்ப்பும், படத்துக்கு தடை கோருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel