ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உடனே சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே இயல்பு நிலை மேலும் காலதாமதம் ஆகலாம் என்று ஸ்டேட் பேங்க்கின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வங்கியில் இருந்து இவ்வளவுதான் பணம் எடுக்க முடியும், ஏடிஎம்களில் இருந்து இவ்வளவு பணம்தான் ஒருவர் எடுக்கமுடியும் போன்ற கட்டுப்பாடுகளை ஒருவேளை அரசு தளர்த்தினாலும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க எங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே நாங்கள் அவர்களுக்கு சப்ளை செய்ய இயலும். எனவே கட்டுப்பாடு இருக்கிறதா இல்லையா என்பதைவிட பணம் இருக்கிறதா இல்லையா என்பதே தலையாய பிரச்சனை என்று அவர் தெரிவித்தார்.
அரசு அறிவித்தபடி டிசம்பர் 30-ஆம் தேதிவரை பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம். வங்கியில் இருந்து பணம் பெறுவது குறித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக ரிசர்வ் வங்கியால் விலக்கிக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
 
Arundhati Bhattacharya, chairman, State Bank of India (SBI) said she does not expect the restrictions to go overnight until the banks get more cash.