டெல்லி

யுபிஐ 15 நொடிகளில் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868 கோடியாக உயர்ந்து இதன் மூலம் ரூ.25.14 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

இதுபரை பணப் பரிமாற்றம், நிலை சரிபார்ப்புகள், பணம் உரிய கணக்கிற்கு மாற்றுதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் 30 விநாடிகளில் நடந்தது. இனி 10 முதல் 15 வினாடிகளில் முடிக்கப்படும். நேற்று முதல் இந்த அதிவேக சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பணம் பெறுபவரின் பெயர் விவரத்தை காண்பிக்க 15 வினாடிகள் ஆனது. இனிமேல் 10 வினாடிகள் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விரைவில் தங்கள் யுபிஐ பயன்பாடுகள் மூலம் ஒரு நாளைக்கு 50 முறை தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். தற்போது, ஒரு நாளைக்கு கணக்கு இருப்பைச் சரிபார்க்க வரம்பு இல்லை. இனி அதை 50 முறையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]