சென்னை

பொங்கலுக்கு ரொக்க பணம் அளிககாதது குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இன்ற்ஜ் சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு’

“பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது.

பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன.

இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை.”

என விளக்கம் அளித்துள்ளார்.