அகமதாபாத்,

மீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா.

இந்நிலையில், 12 தொகுதிகளில் பாரதியஜனதா முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளதாக ஹர்திக் பட்டேல் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர போவதாக என்று பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவுக்கு எதிரான களத்தில் காங்கிரசுடன் கைகோர்த்து செயல்பட்டவர் பட்டேல் சமூக தலைவரான ஹர்திக் பட்டேன்.

இதன் காரணமாக பாஜகவுக்கு கடும் நெருக்கடி தரப்பட்டது. அதன் காரணமாகவே, பிரதமர் மோடி தனது இறுதி பிரசாரத்தின்போது, கண்ணீர் விட்டு வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் பட்டேல் கூறியதாவது,

குஜராத்தில் காங்கிரசின் வெற்றிக்காக நான் முக்கிய பங்காற்றினேன். இதனால் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்தது. என்னால் தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது. எனது பிரசாரத்தின் காரணமாகவே  காங்கிரசின் ஓட்டு 33 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும்,  நான் ஆதரித்ததால் தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றனர் என்றும் கூறினார்.

மேலும், பாரதியஜனதா  12 தொகுதிகளில் முறைகேடு வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதிகளில் மந்திரிகள் முறைகேடு செய்து இருக்கிறார்கள். உண்மையில் பா.ஜனதா 82 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது என்ற அவர்,

பா.ஜனதாவை படேல்கள் எதிர்க்கிறார்கள், தலித்துகள், வியாபாரிகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரும் எதிர்க்கும் போது அவர்களுக்கு யார்  வாக்களித்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதன் காரணமாக அந்த 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது தவறு இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்