சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவானது நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 4 வாரங்களில் இந்த மனுவுக்கு விளக்கமளிக்குமாறு தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel